சமிரா மக்மல்பஃப், தனது 17 வயதில் இயக்கிய அவருடைய அறிமுக திரைப்படமான 'THE APPLE' குறித்து... (தமிழில், இசக்கிவேலன்-விநோ)

 


நான் சொல்ல விரும்பிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் முழுமையான மனிதராக இருப்பதற்கு வெளியுலக தொடர்பு எவ்வளவு முக்கியம் என்பதைத்தான். வெளியுலகுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லாதப்பட்சத்தில், நாமும் விலங்குகளைப் போலதான் இருப்போம், முழுமையான மனிதர்களாக இருக்க மாட்டோம். நான் சொல்ல விரும்பிய முதன்மையான விஷயம் இதுதான். இந்தப் படத்தை நீங்கள் பார்த்தீர்கள் எனில், அந்த இருப் பெண்களும் ஒரு விலங்கைப் போலவே இருப்பர், விலங்குகளைப் போலவே சத்தம் எழுப்பிக்கொண்டிப்பார்கள். இந்தப் படத்தை நாங்கள் 11 நாட்களில் படம் பிடித்தோம், அந்த 11 நாட்களில் எங்களுடன் கொண்ட தொடர்பின் காரணமாக மட்டுமே, கடந்த 11 ஆண்டுகளில் அவர்களுக்குள் நிகழ்ந்த மாற்றத்தைக் காட்டிலும் அதிக மாற்றத்தை அடைந்திருந்தனர். 




இது எல்லாமும் மனித இனம், ஆண்-பெண் குறித்ததாக இருக்கலாம். நான் அதிகம் பயணம் செய்தது இல்லை, என்றாலும்கூட பல்வேறு மனிதர்களுடன் பல்வேறு இடங்களைக் குறித்தும் பல்வேறு நாடுகளைக் குறித்தும் நான் நிறையவே உரையாடியுள்ளேன். ஈரானில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகிலும், வெளியே வந்து வெளியுலகுடன் தொடர்புகொண்டு சமூகப் பங்காற்றுவதற்கு, ஆண்களைவிட பெண்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இந்தத் திரைப்படம் (THE APPLE) ), பெரும்பாலும் பெண்களைப் பற்றியதாக கருதப்படலாம், மிகக் குறிப்பாக ஈரானில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களைப் பற்றியதாக, ஏனென்றால் இன்னும்கூட அவர்களுக்கு வெளியே வந்து தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. அல்லது ஆஃப்கானிஸ்தானில் வாழும் பெண்களைப் பற்றியதாகவும் கருதப்படலாம். ஆனால் இது எல்லோரையும் குறித்ததாகவே இருக்கமுடியும்.

*

Comments